The Indian Times

இதனால் தான் 54வயது ஆகியும் திருமணம் செய்யவில்லை..நடிகர் எஸ்ஜே.சூர்யா

முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஆக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா,கதாநாயகனாகவும் சரி கதையின் வில்லன் ஆகவும் சரி எந்த பாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக செய்து முடிப்பவர் இவர்.1999 ஆம் ஆண்டு வெளியாகிய வாலி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் வெற்றி.தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ் ஜே சூர்யா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வருடமே தளபதி விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார்.இப்படமும் தாறுமாறாக ஹிட் அடித்து முன்னணி இயக்குனராக உருமாறினார்.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

Advertisement

இயக்குனருக்கு தற்போது ஓய்வை கொடுத்து சினிமாவில் நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் இவர்.1988 ஆம் ஆண்டு வெளியாகிய நெத்தியடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.தற்போது சினிமாவையே தனது நடிப்பு திறமையால் கலக்கு கலக்கி வருகிறார்.இறைவி தொடங்கி டான் வரை எஸ் ஜே சூர்யா நடிப்பு காண்பவர்களை நெகிழ செய்துள்ளது.தற்போது பொம்மை என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

Advertisement

54வயது ஆகும் எஸ்ஜே.சூர்யாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.இதுகுறித்து அவர் எங்கும் எதுவும் தெரிவித்தது இல்லை ஆனால் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்,அப்பொழுது அவர் கூறியதாவது,நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் நியூ படத்தில் போட்டேன்,அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.இப்படம் தோல்விப்படமாக அமைந்திருந்தால் எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.ஆனால் எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருந்திருந்தால் அது அவர்களையும் பாதித்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in