கட்சி தொடங்குகிறேனா? நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கை

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

கட்சி தொடங்குகிறேனா? நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கை 1

விளம்பரம்

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

கட்சி தொடங்குகிறேனா? நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கை 2

விளம்பரம்

தற்போது நடிகர் விஷால் ரத்தினம் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள நடிகர் விஷால், சமூகத்தில் இத்தனை ஆண்டுகளாக நடிகனாக சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்து அளித்த மக்களுக்கு நன்றி.என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என மக்களுக்கு ரசிகர் மன்றத்தின் மூலம் உதவி செய்து வருகிறேன்.அரசியல் ஆதாயத்தை பார்த்து மக்களுக்கு நல்லது செய்யவில்லை, மக்கள் நல இயக்கத்தின் மூலம் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்து வருவேன் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment