The Indian Times

கர்ப்பிணின்னு கூட பார்க்காம வயித்துலயே எட்டி மிதிச்சாரு – கதறி அழுத செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா

கர்நாடகாவை சேர்ந்தவர் திவ்யா.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து வாய்ப்பு தேடி சின்னத்திரையில் நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த நாடகங்கள் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.இவர் தற்போது தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவரது கணவர் சீரியல் நடிகர் அர்னவ்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் அர்னாவ்.இவரின் இயற்பெயர் நைனா முகமது.சினிமாவுக்காக தனது பெயரை அர்னவ் என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டுள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.தற்போது செல்லம்மா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Advertisement

ஆரம்பத்தில் திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்துள்ளார்,திவ்யாவுக்கு அர்னவ் மீது காதல் வரவே இருவரும் காதலித்து வந்துள்ளனர் ஒரு கட்டத்திற்கு மேல் அர்னவ் மதம் மாறினால் தான் கல்யாணம் என திவ்யாவிடம் கூறவே அவரும் மதம் மாறியுள்ளார்.மேலும் இருவரும் திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.இந்நிலையில் அர்னவ்க்கு பிற நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதனை திவ்யா கண்டித்துள்ளார்.பின்னர் ஊரறிய திவ்யாவுக்கு தாலி கட்டியுள்ளார். அண்மையில் திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போதும் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வருகிறாராம் அர்னவ்.

தற்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,நான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த உடனே சண்டை ஆரம்பமாகிவிட்டது,இது என் ஊர் உன்னால என்ன பண்ண முடியும் என கூறி என்னை மிரட்டி அடித்து தள்ளி வயித்தில் உதைக்க வந்தார் நான் தள்ளி சென்றதால் காலில் மிதித்தார் இதெற்கெல்லாம் ஆதாரம் என்னிடம் உள்ளது என பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Embed video credits : POLIMER NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in