The Indian Times

கணவர் இறப்பிற்கான காரணத்தினை முதல் முறையாக கூறிய நடிகை மீனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.நடிகை மீனாவின் கணவர் சில நாட்களுக்கு முன்னர் தவறிவிட்டார்.இதனால் கவலையாக இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கணவர் இறந்தது குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.இதில் அவர் கூறியதாவது,எனது கணவர் இறப்பு எதிர்பாராமல் நடந்தது,நாங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ,எனது கணவர் மும்பையில் தங்கி இருந்த பொழுது அங்கு புறாக்கள் அதிகம் என்பதால் அந்த எச்சத்தில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் மீள முடியாமல் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in