The Indian Times

விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

நடிகை நயன்தாராவை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது.எந்த சினிமா உலகமாக இருந்தாலும் நடிகை நயன்தாரா அனைவர்க்கும் பரீட்சயமானவர் தான்.அந்தளவுக்கு தனது ரசிகர்கள் கூட்டத்தின் எல்லையை பரப்பியுள்ளார்.

ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து இன்று ஐயோ நயன்தாராவா என ரசிகர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் உருமாறியுள்ளதற்கு காரணாம் அவர் கடின உழைப்பு தான்,அந்த உழைப்பின் மூலமே இன்று சினிமா உலகில் இவர் இவ்வளவு பெரிய இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி,சத்யராஜ் என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை நட்சத்திரங்கள் காண ஆவலாக வருகை தந்து வருகின்றனர்.நேற்று சென்னையில் சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே மேட்ச் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவருடன் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தினை காண வருகை தந்துள்ளார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவு தெரிவிப்பது போல மஞ்சள் நிற உடையில் வருகை தந்துள்ளார். கணவர் விக்கியுடன் இவர் நேற்று எடுத்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in