The Indian Times

சின்னமணி குயிலே!!! விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகை ராதா

இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராதா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து மிக பிரபலமாகினார்.இவர் நடித்த முதல் மரியாதை படம் இவருக்கு மேலும் சிறப்பினை பெற்றுக்கொடுத்தது.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ராதா,தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : THANTHI TV

தாயை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என கார்த்திகா மற்றும் துளசி என்ற இரண்டு மகள்களும் சினிமாவில் களம் இறங்கினர்.அதில் கார்த்திகா நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.

இரண்டாவது மகள் துளசி கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்திற்கு பிறகு ஒரு படம் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.அதன்பின் இவருக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைக்காததால் தற்போது விலகிவிட்டார்.ராதாவிற்கு கிடைத்த வரவேற்பு அவர்களது இரண்டு மகள்களுக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவரின் கொஞ்சி கொஞ்சி பேச்சும் பேச்சுக்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போது இவர் உடன் நடித்த கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளார்.அப்பொழுது பேச முடியாமல் கதறி அழுதுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in