The Indian Times

என்ன நீ எப்படி ஆபாசமா பேசலாம்….செருப்பால அடிப்பேன்..பயில்வான் ரங்கநாதனை நடு ரோட்டில் அடிக்க சென்ற நடிகை ரேகா நாயர்

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் பயில்வான்.இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் துணை கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.இவர் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு இவருக்கு எப்பவும் இருக்கும்.மேலும் கவுண்டமணி செந்தில் காமெடிகளுக்குள் இவரும் நுழைந்து காமெடி செய்த பல நகைச்சுவை காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று இவர் கூறிய வசனம் இன்று வரை பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

Advertisement

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.மேலும் சில சினிமா தகவல்களையும் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.இந்த கருத்து தெரிவிப்பில் பல நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதாக இவர் மீது பெரும் குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.இதுகுறித்து இவரிடம் கேட்ட பொழுது என்னிடம் ஆதாரம் உள்ளது.ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேசமாட்டேன்,ஆதாரம் இருக்க போய் தான் கூறுகிறேன் யாரவது என்னிடம் வந்து கேட்டால் நான் ஆதாரத்தினை காண்பிக்க தயார் என அறிவித்து இருந்தார்.இவர் பேசும் விஷயங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தும் இவரிடம் இதுவரை யாரும் இவர் கூறிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இரவின் நிழழ் படத்தில் நடித்தவர் நடிகை ரேகா நாயர்.இதில் இவர் நடித்தது குறித்து பயில்வான் ரங்கதான் ஆபாசமாக விமர்சனம் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ரேகா நாயர்,இன்று சென்னையில் திருவான்மியூர் பகுதியில் காலையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை மறித்து அவரிடம் சண்டையிட்டார்,என்னை பற்றி எப்படி ஆபாசமாக பேசலாம்,உனக்கு என்ன உரிமை இருக்கு,நான் உனது மனைவியா என கேட்டு செருப்பால் அடிக்க அடித்துவிடுவேன் என கிழித்து தொங்கவிட்டுவிட்டார்.அங்கு கூடி இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.இந்த வீடொயோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in