சிறந்த உளவாளியா இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் – திரை விமர்சனம் (?/5)

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் இயக்குனர் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ஏஜென்ட் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் இவருடன் ரியா சுமன்,புகழ்,முனீஸ்காந்த் ,ரெடின் கிங்க்ஸ்லி ,இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் சந்தானத்திற்கு வெற்றியை கொடுத்ததா என்பதை விமர்சனத்தில் காணலாம் வாருங்கள்…

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

சிறந்த உளவாளியா இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை :

ஜமீன்தாராக இருக்கும் குரு சோமசுந்தரத்திற்கும் ,அவர் தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய இந்துமதிக்கு பிறந்த குழந்தை தான் கதையின் நாயகன் சந்தானம்.இதனால் சந்தானமும் அவரது அம்மாவும் பெரும் சங்கத்திற்கும் அசிங்கத்திற்கும் ஆளாகிவந்தனர். சிறுவயது முதலே துப்பறிவதில் கில்லாடியாக இருந்த சந்தானம் வளர்ந்த பிறகு துப்பறியும் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார்.அவருக்கு அவரது தாய் இந்துமதி இறந்த செய்தி கிடைக்கவே பதறி செல்லும் அவருக்கு ,தான் வருவதற்கு முன்னயே தாயின் இறுதி சடங்கை முடித்த செய்தி தெரிகிறது.தாயின் முகத்தினை கடைசிவரை பார்க்காமல் வேதனைக்குள்ளாகிறார் சந்தானம்.இந்நிலையில் இவருக்கு ஒரு கொலை பற்றி விசாரிக்க வாய்ப்பு வருகிறது.இந்த கொலையை பற்றி எப்படி துப்பு துலக்கினார்,குற்றவாளியை கண்டறிந்தாரா?இதனால் அவருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பதே படத்தின் மீதி கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ

சிறந்த உளவாளியா இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம் :

விளம்பரம்

படத்தில் சந்தானத்தின் நடிப்பு வழக்கம் போல சூப்பர் என்றாலும் ஒரு நல்ல படத்திற்கு அது மட்டும் தேவைப்படாது.படத்தில் உள்ள சிறந்த திரைக்கதை தான் படத்தினை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும்.தெலுங்கில் ஹிட் அடித்த ஏஜென்ட் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தினை சரியாக எடுக்க படக்குழு தவறிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.கதாநாயகி ரியா நடிப்பு ஓகே.புகழ் நகைச்சுவை எந்த இடத்திலும் சிரிப்பை கொடுக்கவில்லை.சந்தானத்திற்கு அம்மா அப்பாவாக நடித்த சோமசுந்தரம் மற்றும் இந்துமதி தங்களது நடிப்பினை கனகச்சிதமாக நடித்துள்ளனர்.இயக்குனர் மனோஜ் பீதா இயக்கம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.யுவனின் பாடல்கள் படத்திற்கு ஒர்கவுட் ஆகவில்லை,இருப்பினும் பின்னணி இசை நல்ல பக்கபலமாக அமைந்துள்ளது.மொத்தத்தில் துப்பறிவாளன் படத்திற்கு இந்த கதை போதுமானது இல்லை.

கட்டாயம் படிக்கவும்  பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து வெளியாகிய நானா புலுக் வீடியோ பாடல் இதோ

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment