The Indian Times

செல்வராகவன் எனக்கு இன்னொரு அப்பா.. மனம் உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | Aishwarya Rajinikanth

நடிகர் தனுஷ்  கடந்த 18 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா அவர்களை மணம் முடித்தார். தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற போதிலும் பல எதிர்ப்புகளுக்கும், சச்சரவுகளுக்கும் நடுவில் அவர் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார். 18 வருடங்கள் கடந்து விட்டப் பிறகு தானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும், மனைவியாகவும், நல்ல தோழியாகவும் இருந்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி எனவும், தாங்கள் இருவரும் இனி தனித்தனியாக தங்கள் பணத்தை தொடர உள்ளதாகவும், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

Advertisement

தனுஷ் எப்போதும் வேலை நிமித்தமாக வெளிநாடு அல்லது வெளியூர் பயணத்திலேயே இருப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில்லை என்றும், அதே போல ஐஸ்வர்யா யோகா, ஆன்மீகம் என்று இருப்பதாலும் இருவரும் இணைந்து வாழ முடியாத சூழல் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காதலர் தினத்தன்று அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடி வந்த சூழலில் ஐஸ்வர்யா தனது ஆல்பம் சாங்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என தனது பெயரை மாற்றி உள்ளார். மற்ற சோசியல் மீடியாக்களில் “ஐஸ்வர்யா தனுஷ்” என்று உள்ள நிலையில் இந்த ஆல்பம் சாங்கில் தனது பெயரை மாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

இன்று தனுஷ் அண்ணன் செல்வராகவனுக்கு பிறந்த நாள். இதற்காக ஐஸ்வர்யா அவர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னடைய குரு, நண்பன் மற்றும் எனக்கு அப்பா போன்றவர் செல்வராகவன் என்றும் அவர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு இருந்தாலும் தனுஷ் அண்ணன் மேல் ஐஸ்வர்யா வைத்திருக்கும் மரியாதையை இந்த பதிவு காட்டுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in