பல உலக அழகிகள் இருந்தாலும்,இனி வந்தாலும் இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான்.இன்று அவர் ரசிகர்களுக்கு உலக அழகி தான்.அழகு மட்டும் இல்லாமல் தனது நடிப்பினால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவருக்கென பல மொழி சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.மேலும் அதே சமயம் நல்ல படங்கள் வந்தால் அதில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்
இப்படம் நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இன்று சென்னையில் ரசிகர்கள் உடன் இப்படத்தினை காண ஐஸ்வர்யா ராய் நடிகர் விக்ரம் உடன் திரையரங்கு வருகை தந்துள்ளார்.அங்கு கூடிய ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/shorts/JO3PIxXc26c
Embed video credits : Behindwoods Tv
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in