The Indian Times

என் இதயத்துடிப்பு என் அப்பா..சூப்பர் ஸ்டார் உடன் புகைப்படம் எடுத்து தந்தையர் தின வாழ்த்துக்கள் கூறிய AISWARYA RAJINI

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.தனது முதல் படத்தின் மூலமே உலகளவு பிரபலமாகினார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவிலை.சினிமாவிற்கு நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது மீண்டும் படங்களை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Advertisement

இவர் தந்தை ரஜினிக்கு மிக செல்ல பிள்ளை.இன்று தந்தையர் தினத்தினை முன்னிட்டு நடிகர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படத்தில் தலைவர் ரஜினிகாந்தின் சிரிப்பு மிக அருமையாக உள்ளது எனவும் கூறி கமெண்ட் செய்து புகைப்படத்தினை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in