The Indian Times

திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட அனிருத்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் .இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ரெட் ஜெயண்ட் மூவி உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.படத்தினை காண மக்கள் காலையில் இருந்தே கூட்டம் கூட்டமாக திரையரங்கு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து காண அதிகாலை 4 மணி காட்சிக்கே படக்குழு திரையரங்குகளுக்கு வருகை தந்தனர்.படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள விக்ரம் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.அதிலும் குறிப்பாக உலகநாயகன் எழுதி பாடியுள்ள பத்தலை பத்தலை பாடல் நல்ல வரவேற்பை திரையரங்கில் பெற்றுள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை இப்படம் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இன்று காலை படத்தினை படக்குழுவை சேர்ந்த அனைவரும் காண ஆவலாக வந்தனர்.படம் வெளியானால் அதனை ரசிகர்களுடன் இணைந்து காண படக்குழு வருவது வழக்கம்.இந்நிலையில் விக்ரம் படத்தினை காண வந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.அவரை மறித்துக்கொண்ட ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்து தள்ளு முள்ளு செய்தனர்.இறுதியாக அந்த கூட்டத்தில் இருந்து அனிருத் மீண்டு வந்து திரையரங்கிற்குள் நுழைந்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : kolly infos

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in