The Indian Times

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களை மறக்க முடியாமல் செய்த ஏஆர் ரஹ்மான்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

Advertisement

இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் , பத்துதல படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

ஏஆர் ரஹ்மானின் மகனும் பாடகராக சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.இந்நிலையில் சென்னையில் நேற்று ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற்றுள்ளது.இதில் பல ரசிகர்களுக்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.5ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் ஏடுத்தவர்களுக்கு கூட உள்ளே அனுமதிக்கவில்லை என புகார் எழுந்து உள்ளது.மேலும் சில ரசிகர்கள் அங்கு இருப்பவர்களால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது,இதனால் ஏஆர் ரஹ்மான் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Embed Video Credits : NEWS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in