The Indian Times

OTT-யில் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் – ஏஆர் ரஹ்மான்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.தற்போது ரஹ்மான் வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது

Advertisement

இப்படவிழாவில் கலந்துகொண்ட பொழுது ஏஆர் ரஹ்மான் கூறியதாவது,இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்த பிறகு ஓடிடியில் படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.நம்முடைய கலாச்சாரத்தினை பொன்னியின் செல்வன் அழகாக எடுத்துரைக்கிறது என தெரிவித்துள்ளார் ஏஆர் ரஹ்மான்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in