The Indian Times

இந்த வாழ்க்கை உனக்கு நான் போட்ட பிச்சை.. ராதிகாவை வெளுத்துவாங்கிய பாக்கியா…. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் கோபி அம்மா கோவிலில் கோபியை பார்த்து ராதிகாவிடம் இருந்து விலகி வர சொல்லுகிறார் இதனை ராதிகா கவனித்து விடவே அலுவலகம் வந்து பாக்கியாவிடம் கோபி இல்லாமல் உன்னால் இருக்க முடியவில்லையா என கேட்கவே அதனால் கடுப்பாகிய பாக்கியா இந்த வாழ்க்கை உனக்கு நான் கொடுத்தது,நான் வேண்டான்னு சொன்ன வாழ்க்கையை தான் நீ வாழுற மறந்துறாத என கிழித்தெடுத்துள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in