The Indian Times

இது என் புருஷன் குடும்பம்… என் புருஷன் வீடு.. நீ வெளிய போடி என பாக்கியாவை கூறிய ராதிகா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது


பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.

Advertisement

கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

Advertisement

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார் ராதிகா

ராதிகா பையுடன் வருவதை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். உள்ளே வந்த ராதிகா பாக்கியாவை பார்த்து இது என் புருஷன் குடும்பம் என் புருஷன் வீடு நான் இனி இங்க தான் இருப்பேன் நீ வெளியே போ பாக்கியா என கூறுகிறார்.

இதனால் பாக்கியா மற்றும் ஈஸ்வரி என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மருமகள் பாக்கியாவை வெளியே போக சொன்ன ராதிகாவின் மேல் கடுப்பாகி ஈஸ்வரி அவரை திட்டி தீர்க்கிறார்.பாக்கியா என் மருமகள் அவள் இங்கே தான் இருப்பாள் நீ யார் அவளை வெளியே போக சொல்ல என கேட்டு திட்டி தீர்க்கிறார்.

Advertisement

நடப்பதை பார்த்துக்கொண்டு ஒன்றும் புரியாமல் கோபி எதுவுமே பேசாமல் உறைந்து நிற்கிறார்.வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராதிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in