The Indian Times

நீ HOTEL நடத்த கூடாது… புதியதாக பாக்கியாவுக்கு கிளம்பிய பிரச்சனை…. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் பாக்கியவை அக்கம் பக்கத்தினர் நீங்கள் இங்கு ஹோட்டல் நடத்த கூடாது,இதனால் காலனி அமைதி கெடுகிறது,ஏற்கனவே உங்களால் தூங்க முடியவில்லை என கூறி பாக்கியா கடைக்கு எதிராக சண்டை போட்டு வருகின்றனர்.பாக்கியா எவ்வளவு விளக்கியும் அவர்கள் கேட்டபாடில்லை,இந்த ப்ரோமோ ரசிகர்களுக்கு,பாக்கியா உங்களுக்கு மட்டும் பிரச்சனை எங்கிருந்து வருகிறது என சோகத்தையும் மேலும் பெரும் கடுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in