The Indian Times

உங்களால ஒரு நிமிஷம் கூட தாங்க முடியாது… கோபியை மிரட்டிய பாக்கியா | BAAKIYALAKSHMI SERIAL PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்துவிடுகிறார்

இதனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.இருவருக்கும் கல்யாணம் நடைபெறுகிறது.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இந்த ப்ரோமோவில் ராதிகா கோபியிடம் என்னுடன் வாழ்ந்தது சந்தோசமாக இல்லை என்று சொன்னிங்களே இதை நான் கூறினால் உங்களால் ஒரு நிமிடம் கூட தாங்க முடியாது நான் பொழச்சுப்போங்கன்னு சொல்லி விடுறேன் என கெத்தாக கூறி நடந்து சென்றுள்ளார்.அவரை பார்த்து செய்வதறியாது கோபி திகைத்து நிற்கின்றார்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://www.youtube.com/watch?v=9xUchdvdMOQ&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAYTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in