The Indian Times

ராதிகா வீடு புகுந்து மிரட்டும் ஈஸ்வரி..வெளியே விரட்டிய ராதிகா | BAAKIYALAKSHMI SERIAL PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சொல்வது போல கோபி ஒரு நாள் பாக்யலக்ஷ்மியிடம் மாறிவிடுகிறார்.இந்த உண்மையை குடும்பத்தில் எல்லாரிடமும் போட்டுடைக்கிறார் பாக்கியா மேலும் கோபியை விவாகரத்தும் செய்து விடுகிறார்.பாக்யா விவாகரத்து செய்துவிட்டாள் அவரை வீட்டை விட்டு வெளியே விரட்ட வேண்டும் என கோபி திட்டம் தீட்டி பாக்கியவை வீட்டை விட்டு வெளியே விரட்ட முயற்சி செய்கிறார்.ஆனால் பாக்கியா பதிலுக்கு கோபி துணிகளை வெளியே எறிந்து அவரை வெளியே போக கூறுகிறார்.இதனால் கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.வெளியேறிய கோபி நேராக ராதிகா வீட்டுக்கு சென்று தன்னை வெளியே விரட்டிவிட்டார்கள் என கூறி நாடகமாடி ராதிகா வீட்டுக்குள் செல்கிறார்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இதில் ராதிகா வீட்டுக்கு வந்த கோபியை தேடி அவரது அம்மா ஈஸ்வரி வரவே, வீட்டுக்குள் வந்து அவரை தேடுகிறார் ,மேலும் எங்கள் குடும்பத்தினை கெடுத்துவிட்டு உங்கள் பொண்ணை வாழவைக்கலாம் என நினைக்காதீங்க ,நீங்க யாரும் நல்லா இருக்க மாட்டிங்க என கூறி சாபம் இடுகிறார்.இதனால் கடுப்பாகிய ராதிகா ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக கூறுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த எபிசொடுக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in