The Indian Times

நீ இந்த வீட்டுல ஒரு சமையல்காரி..பாக்கியாவை கண்டபடி திட்டிய கோபி | Baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்துவிடுகிறார்

தற்போது பாக்கியவை மகள்,மகன் மற்றும் மருமகள்கள் கோபியுடன் சேர்ந்து வாழ கெஞ்சுகின்றனர்.இதனை பார்த்த கோபி ,என்ன அவளிடம் பிச்சை தேடுகிறீர்களா பாக்கியாவுடன் வாழ்வதற்கு யாரும் இங்கு அலையவில்லை,அந்த அவசியமும் இல்லை.எப்போ கோர்ட் சென்று விவாகரத்து வாங்கினாலோ எங்கள் இருவருக்கும் உறவு இல்லை என்று ஆகிவிட்டது.அவளை இருங்க என கூறி யாரும் கெஞ்ச வேண்டாம்.அவள் இல்லையென்றால் குடும்பம் இல்லாமலா போய்விடும்.அவள் வீட்டை விட்டு இப்போவே வெளியே செல்ல வேண்டும் .அவளிடம் யாரும் கெஞ்ச வேண்டாம்.இவள் இந்த வீட்டில் இத்தனை வருஷம் பார்த்தது சமையல்காரி வேலை தான் என கூறி கடுமையாக பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் கோபியின் மேல் கடும்கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது

https://youtu.be/WbpyEoGzhCM

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in