The Indian Times

என்ன கல்யாணம் பண்ணிக்கோ..இல்லைனா செத்துடுவேன்.. ராதிகா மிரட்டும் கோபி | BAKKIYALAKSHMI SERIAL

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று சொல்வது போல கோபி ஒரு நாள் பாக்யலக்ஷ்மியிடம் மாறிவிடுகிறார்.இந்த உண்மையை குடும்பத்தில் எல்லாரிடமும் போட்டுடைக்கிறார் பாக்கியா மேலும் கோபியை விவாகரத்தும் செய்து விடுகிறார்.பாக்யா விவாகரத்து செய்துவிட்டாள் அவரை வீட்டை விட்டு வெளியே விரட்ட வேண்டும் என கோபி திட்டம் தீட்டி பாக்கியவை வீட்டை விட்டு வெளியே விரட்ட முயற்சி செய்கிறார்.ஆனால் பாக்கியா பதிலுக்கு கோபி துணிகளை வெளியே எறிந்து அவரை வெளியே போக கூறுகிறார்.இதனால் கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.வெளியேறிய கோபி நேராக ராதிகா வீட்டுக்கு சென்று தன்னை வெளியே விரட்டிவிட்டார்கள் என கூறி நாடகமாடி ராதிகா வீட்டுக்குள் செல்கிறார்

விஜய் தொலைக்காட்சி பாக்கியலட்சுமி தொடரின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் ரோட்டில் செல்லும் ராதிகாவை வழிமறித்து உனக்காகதான் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு வந்துருக்கேன்,நீ என்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு,என்ன கல்யாணம் பண்ணிக்கோ என கூற,அதற்கு ராதிகா உங்ககூட வாழ ஆசை இருக்கு,எனக்கு கொஞ்சம் டைம் வேணும் நான் இன்னும் கொஞ்சம் யோசிக்கணும் என கூற ,கடுப்பாகிய கோபி நான் செத்து போறது தவிர வேறே வழியே இருக்காது என கூற ,நம்பிக்கை ஓட இருங்க நல்லதே நடக்கும் என கூறி ராதிகா அங்கிருந்து செல்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in