அஸ்வின் லாஸ்லியா நடிப்பில் வெளியானது “Baby Nee Suga”r ஆல்பம் வீடியோ! | Ashwin Kumar, Losliya, Vriddhi Vishal

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இவர் குக் வித் கோமாளி வருவதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற நாடகத்தில் பிக்பாஸ் புகழ் பாவனியுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு புகழ் கிடைக்கவில்லை. அவருக்கு பெயரும் புகழும் கொடுத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
ஷிவாங்கியுடன் சேர்ந்து இவர் செய்த காமெடிகள் மிக க்யூட்டாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் வெளியில் அவ்வளவு ஃபேன்ஸ் இருந்தார்கள். அஸ்வினுடையை வாழ்க்கையையே மாற்றிய நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளிதான். இவர் நடிப்பில் தற்போது ஒரு ஆல்பம் சாங் வெளியாகியுள்ளது.

அஸ்வின் லாஸ்லியா நடிப்பில் வெளியானது "Baby Nee Suga"r ஆல்பம் வீடியோ! | Ashwin Kumar, Losliya, Vriddhi Vishal 1

விளம்பரம்

இவரும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவும் இணைந்து அந்த ஆல்பம் சாங்கில் நடித்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டவர்களுள் ஒருவர்தான் லாஸ்லியா. இவர் அந்த சீசனில் இறுதி 4 போட்டியாளர்களுள் ஒருவராக வந்தார். இலங்கையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான் லாஸ்லியா மரியநேசன். இவரது அழகான தமிழ் உச்சரிப்பும், அழகு தமிழில் இவரது பேச்சு நடையும் இவரை பிக்பாஸ் என்னும் பிரபல நிகழச்சிக்கு வரவழைத்தது. படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தவர்களும், இனமேல் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்கள் என பிரபலங்களை மட்டுமே அழைத்து நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் ஷோ, லாஸ்லியா போன்ற தமிழ் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களை அழைத்து வந்து அவரை பிரபலமாக்கியுள்ளது. Youtube Video Code Embed Credits: Sony Music South

அஸ்வின் லாஸ்லியா நடிப்பில் வெளியானது "Baby Nee Suga"r ஆல்பம் வீடியோ! | Ashwin Kumar, Losliya, Vriddhi Vishal 2

விளம்பரம்

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான இவர்கள் இருவரும் இணைந்து “பேபி நீ சுகர்” என்ற ஆல்பம் சாங்கில் நடித்துள்ளனர். இதற்கு இவர்களின் நண்பரான சாண்டி மாஸ்டர் நடன இயக்குனநாரக பணியாற்றிள்ளார். சமீபத்தில் ஒரு பட வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியது சர்ச்சையானது, 40 படங்களின் கதை கேட்டு தூங்கிவிட்டதாக அஸ்வின் சொல்ல நெட்டிசன்கள் வறுத்து எடுத்துவிட்டனர். இவர் நடிப்பில் வெளியான “என்ன சொல்ல போகிறாய்” படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. என்றாலும் சில படங்களில் அஸ்வின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஆல்பம் பாடல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். லாஸ்லியாவுடன் இவர் நடித்த அந்த ஆல்பம் சாங்கை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment