அக்கா..உன்ன பாத்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம் வருது..எமோஷனல் ஆன பாலா | Bala Thamarai Bond

பிக்பாஸ் சீசன் 4-ல் ஒரு போட்டியாளர் தான்பாலாஜி முருகதாஸ். இவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். முந்தைய சீன்களில் இருந்தது போல் இல்லாமல் தற்போது முற்றிலும் வேறுபட்டு உள்ளார். முன்பு ரூல்ஸ்-ஐ மீறுவது. தேவையில்லாமல் ஆரியுடன் சண்டை போடுவது என்று பக்குவம் இல்லாமல் நடந்து கொண்ட பாலா வெளியே பல எதிர்ப்பாளர்களை சம்பாதித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதை காண முடிகிறது.

அக்கா..உன்ன பாத்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம் வருது..எமோஷனல் ஆன பாலா | Bala Thamarai Bond 1

விளம்பரம்

குறிப்பாக ஜூலியை மற்ற ஹவுஸ் மேட்ஸ் ஒதுக்கும் போது பாலா மட்டுமே ஆதரவாக உள்ளார். குறிப்பாக தாமரை பாலா நட்பு பார்க்கவே தாய்-மகன் உறவு போல உள்ளது. பாலாவின் தாயார் சிறு வயதில் தாமரை போலவே உள்ளார். அதனால் தான் என்னவோ பாலா தாமரை மீது மிகுந்த அன்பை காட்டுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாமரை பாலாவிடம் காட்டும் அன்பு, அவருக்கு ஊட்டி விடுவது போன்ற நிகழ்வுகள் பாலா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் இந்த அக்கா தம்பி உறவு இறுதி வரை நீடிக்க வேண்டும் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Official Balaji Army

அக்கா..உன்ன பாத்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம் வருது..எமோஷனல் ஆன பாலா | Bala Thamarai Bond 2

விளம்பரம்

சில நாட்களுக்கு முன்பு பாலா தாமரைக்கு தலை சீவி விடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதை பார்த்த தாமரை பாலா ரசிகர்கள் இவர்கள் நட்பு பிக்பாஸ் கடந்தும் இருக்க வேண்டும் என தங்கள் ஆவலை தெரிவித்தனர். மேலும் அக்கா உன்னை பார்த்தா என் அம்மா போலவே இருக்க என்று சொல்லி பாலா எமோஷனல் ஆகிறார். தாமரை பாலா நட்பு பார்க்கும் போது உண்மையில் ஒரு அம்மா பையன் உறவு போலவே உள்ளது. அந்த Cute ஆன வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment