The Indian Times

ஆரியை எதிர்க்கும் பாலா! குரூப்பிஸம் செய்ய தயார் – பாலாஜி

பாலாஜி தற்போது நன்றாக விளையாடி வருகிறார் என்று அனைவராலும் சொல்லப்பட்டாலும் பல்வேறு விமர்சனங்களுக்கு தற்போது ஆளாகி விடுவரோ என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரி, பாலா, அனிதா இவர்கள் தனியாக விளையாடி தங்கள் சிறப்பம்சத்தை வெளிப்படுத்தி வந்த சூழலில் இவர்களுக்குள் சிறு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆரி ஆஜீத் விளையாட்டை குறை சொல்ல அவர் அதை நேரடியாக எதிர்க்காமல் புறம் பேசும் நிலையில் தள்ளப்படுகிறார்.

Advertisement

Advertisement

ஆரம்பத்தில் இருந்தே பாலாவின் கை கூலியாக தெரிகிறார் என்றும் அவர் மீது விமர்சனம் வைத்தாலும் அது மிகையாகாது. அவரது தனி திறமை இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் வெளிபடையாக தெரியவில்லை மேலும் அவர் தனக்கென்று ஒரு விளையாட்டு முறை தேர்வு செய்யாமல் பாலாவின் யோசனை கையாண்டது அவரை ஈடுபாட்டை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆரி அவரை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை அமைத்திருக்குமோ என்றும் கணிக்கப்படுகிறது. இதனால் பாலா தனி குருபிஸம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in