The Indian Times

வீட்டிலேயே BAR SETUP வைத்த முன்னணி தமிழ் நடிகை…. அவரே வெளியிட்ட வீடியோ

திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஜனனி,இவர் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.பின்னர் தனது விடா முயற்சியின் பயனாக இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜனனிக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சட்டென்று பிடித்துக்கொண்டார் ஜனனி.இதன்மூலம் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தினை பிடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார் அதில் குறிப்பாக அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த தெகிடி படமும் நல்ல வரவேற்பினை இவருக்கு அளித்தது.இப்படத்தில் இடம் பெற்ற விண்மீன் விதையில் எனும் பாடலில் கியூட் ஆக வந்து அனைவரின் இதயத்தினையும் கொள்ளை அடித்துவிட்டார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஜனனி

Advertisement

தற்போது இவர் தனது வீட்டில் பார் செட்டப் வைத்துள்ளார்.இது இவரின் பல நாள் கனவு எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் அதன் முன்பு நின்று வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் சிலர் இவரை கலாய்த்தும் வருகின்றனர்.இதனை பற்றி கவலைப்படாமல் தனது ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in