The Indian Times

பாரதிக்கு தெரியாமல் குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற கண்ணம்மா… கதறி அழுத பாரதி .. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.

கண்ணம்மாவிடம் தன்னை மன்னித்து தன்னுடன் வந்து வாழும்படி கெஞ்சுகிறார் பாரதி.குழப்பத்தில் இருக்கும் கண்ணம்மாவிடம் ஹேமாவும்,லக்ஷ்மியும் அம்மா நம்மை பற்றி தப்பா பேசியவர்களுடன் இருக்க வேண்டாம் வேறு எங்கயாவது சென்றுவிடலாம் என கூறவே,கண்ணம்மாவும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு செல்கிறார்.கண்ணம்மாவை அழைக்கவரும் பி பாரதி அவர் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்த உடன் கலங்கி போய் கதறி அழுகிறார் கண்ணம்மா

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in