The Indian Times

எனக்கு விக்ரமனையும் ADK-வையும் பிடிக்கவே பிடிக்காது… முதல்முறையாக நேரலையில் வந்த BB தனலட்சுமி

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி .

Advertisement

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் .ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் .ஒன்பதாவாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார்.இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது

தனலட்சுமி குறைந்த வாக்குகளை பெற்று யாரும் எதிர்பாராத வண்ணம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக நேரலையில் வந்து பேசியுள்ளார்.அதில் அவரிடம் உங்களுக்கு யாரை பிடிக்காது வீட்டில் என கேட்டதற்கு எனக்கு விக்ரமனையும் ஏடிகே-வையும் பிடிக்கவே பிடிக்காது என கூறியுள்ளார்.இதனால் விக்ரமன் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்,பொம்மை டாஸ்கில் விக்ரமன் மட்டும் தான் உங்களுக்கு நடந்த அநீதிக்கு குரல் கொடுத்தார் அதை மறந்துட்டிங்களே என கேள்வி கேட்டு வருகின்றனர்.

https://youtu.be/x0Cj_Novtwk?t=119

Embed video credits : VIJAY TELEVISON

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in