“நான் அவங்களுக்கு மரியாதையே கொடுக்கல…” தேம்பி தேம்பி அழுத அபிஷேக்! BiggBoss வீட்டின் 2வது நாள்

பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது நாள். இதுவரை எந்த ஒரு சண்டையும் இல்லாமல் யாருக்கும் எந்த விதமான மன கசப்பும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முதல் முறையாக அபிஷேக் ராஜா தேம்பி அழுதார். இவர் இந்த வீட்டிற்கு சென்றதில் இருந்தே போட்டியாளர்களிடம் நல்லவிதமாக இருந்தாலும் வெளியே அவரை பார்க்கும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

"நான் அவங்களுக்கு மரியாதையே கொடுக்கல..." தேம்பி தேம்பி அழுத அபிஷேக்! BiggBoss வீட்டின் 2வது நாள் 1

விளம்பரம்

இந்நிலையில் நேற்று அபிஷேக் ராஜா, அங்கு இருக்கும் சக போட்டியாளர்கள் பற்றி அவருடைய தனிப்பட்ட கருத்தை கூறி கொண்டிருந்தார். அதில் வருண், சிபி , நிரூப், அபிநய் ஆகியோரை பற்றி கூறினார் அபிஷேக். அதன் பின்னர் தத்துவ ரீதியாக சில போட்டியாளர்கள் சூழ்ந்து நிற்க , அம்மாவால் தாய் பால் கொடுக்க முடியும் ஆனால் எல்லோருக்கும் கொடுக்க முடியாது என்று கூறி அனைவரிடமும் பாராட்டை பெற்றார். அதோடு அவர் கண்கலங்க துவங்கினார்.

"நான் அவங்களுக்கு மரியாதையே கொடுக்கல..." தேம்பி தேம்பி அழுத அபிஷேக்! BiggBoss வீட்டின் 2வது நாள் 2

விளம்பரம்

என்ன காரணம் என்று மற்றவர்கள் கேட்க , தன்னுடைய அம்மா ஞாபகம் வந்துவிட்டதாக கூறினார் அபிஷேக். சமீப காலமாகவே , தன் அம்மாவிடம் சரியாக பேசவில்லை , எதற்கெடுத்தாலும் சண்டை தான் வரும் , அப்பாவின் மறைவிற்கு பிறகு நான் அம்மாவை அதிகமாக கஷ்டப்படுத்தியிருக்கிறேன் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை, நிறைய வாக்குவாதம் செய்தேன், வெளியே சென்ற பிறகு அவருடனே இருக்க வேண்டும் என்று தன் தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுதார் அபிஷேக். பிறகு அவரை சூழ்ந்து கொண்ட சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

"நான் அவங்களுக்கு மரியாதையே கொடுக்கல..." தேம்பி தேம்பி அழுத அபிஷேக்! BiggBoss வீட்டின் 2வது நாள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment