“எங்க வீட்ல ஒருவேளை சாப்பாடு மட்டும் தான்..” கண்கலங்கிய இசைவாணி BiggBoss 5 Promo

பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் துவங்கியுள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி . தமிழில் இந்த நிகழ்ச்சி இது வரை 4 சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ் , இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பல எதிர்பார்ப்புகளை கிளப்பியது. யார் யார் உள்ளே சொல்லப்போகிறார்கள் என்ற குழப்பம் அனைவரிடமும் இருந்தது.

"எங்க வீட்ல ஒருவேளை சாப்பாடு மட்டும் தான்.." கண்கலங்கிய இசைவாணி BiggBoss 5 Promo 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது எந்தெந்த போட்டியாளர்கள் உள்ளே செல்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளிவந்தது. இதில் முதலில் இசைவாணி சென்றார். அதன் பிறகு சீரியல் நடிகர் ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி , சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பலரும் எதிர்பார்க்காத விதமாக பல புதுமுகங்கள் இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதன் பிறகு நடப்பதை பொறுத்திருந்து பாப்போம்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment