The Indian Times

பிக்பாஸ் வீட்டிலிருந்த ரெட் கார்டு கொடுத்த வெளியேற்றப்படும் போட்டியாளர்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடிங்கி வெற்றிகரமாக முப்பது நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகிய இருவர் வெளி யேற்றப்பட்டுள்ள நிலையில் அர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

இந்த 30 நாட்களை ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ளது, இதில் முக்கியமானவர் பாலா இவர் அர்ச்சனா ரியோ சனம் ஆரி என கிட்டத்தட்ட எல்லா போட்டியாளர்களுடனும் சண்டை போட்டுவிட்டார். இதில் சனமுக்கும் இவருக்கும் நடந்த சண்டை கிட்டத்தட்ட அடிதடி வரை சென்றுவிடட்டது.

Advertisement

இந்நிலையில் இந்த வாரம்  பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து பாலாஜி வெளியேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இதற்கு காரணம் சனம் பற்றி மிக அவதூறாக பேசினார் அந்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகி பின்னர் நீக்கப்பட்டது.

மேலும் சனம் ஷெட்டியிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட நிலையில் பாலாஜி இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளி யேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in