The Indian Times

இந்த குரலை எங்கயோ கேட்ருக்கேன்… பாரதி காதலியே கண்ணம்மா பாடலை பாடி பாரதிக்கு நினைவுபடுத்தும் கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

செல்லப்பாண்டி கண்ணம்மாவை பழி வாங்கி அவரது தொழிலை கெடுக்க நினைத்து அவதூறு பரப்புகிறார்.இதனால் கண்ணம்மா மேல் ஊருக்குள் கெட்டபெயர் விழுந்து விடுகிறது. தனது மேல் அநியாயமாக வீண் பழியை பாண்டி சுமத்தியதை வெளிக்கொண்டு வருகிறார் கண்ணம்மா,உடனே நாட்டாமை பாண்டியை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க கூறவே,அதற்கு பாண்டி மறுப்பு தெரிவித்துள்ளார்,இதனால் பாரதி பாண்டியுடன் குஸ்தி போட்டுள்ளார்.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பாரதியை இரும்பு கம்பியால் பாண்டி தலையில் அடித்து விடுகிறார்.இதனால் பழசை எல்லாம் மறந்துவிடுகிறார் பாரதி.அம்மாவையும் அவருக்கு தெரியவில்லை,மனைவி கண்ணம்மாவையும் அவருக்கு தெரியவில்லை.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கண்ணம்மா பாரதிக்கு பழசை நினைவுகொண்டு வரும் வகையில் பாரதி காதலி கண்ணம்மா பாடலை பாடுகிறார்,இந்த பாடலை கேட்ட உடன் பாரதி பழைய நினைவுகளை யோசித்து பார்க்கிறார்.பாரதி சீக்கிரம் குணமடைவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.விரைவில் சீரியல் முடிவுக்கு வர இருப்பதையும் ப்ரோமோவில் அறிவித்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in