The Indian Times

பிக் பாஸ் வீட்டில் பேயா? போட்டியாளருக்கு நிகழ்ந்த அமானுஷ்ய நிகழ்வு… பயந்து போன போட்டியாளர்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் பிக் பாஸ் போட்டி நடைபெற்று வருகிறது.தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 6வது சீசன் தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

கடந்த சீசனில் சுவாரசியம் இல்லாததால் இந்த சீசனில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள பிக் பாஸ் முயற்சிகளை எடுத்து வருகிறது.அதன்படி தற்போது நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுவாரசியம் இல்லாத நான்கு பேரை தேர்ந்தெடுத்து வெளியே படுக்க வைக்க கூறியுள்ளனர்.அதன்படி விக்ரமன்,ஜனனி,நிவா,குயின்சி ஆகியோர் வெளியே தங்கியுள்ளனர்.இந்நிலையில் உள்ளே படுத்திருந்த ரட்சிதா வெளியே எழுந்து வந்துள்ளார்.

Advertisement

அவரிடம் வெளியே இருந்த போட்டியாளர்கள் ஏன் சீக்கிரமாக எழுந்துவிட்டிர்கள் என கேட்க,உள்ளே என்னால் தூங்க முடியவில்லை சத்தங்கள் கேட்கிறது,ஜிபி முத்து சிரிப்பது போல சத்தம் கேட்டது எழுந்து பார்த்தால் அவர் தூங்கி கொண்டு இருக்கிறார்.அதேபோல் மற்றவர்களின் சத்தமும் கேட்கிறது எழுந்து பார்த்தல் யாருமில்லை என கூறியுள்ளார்.ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக தகவல் இணையத்தில் பரவி வந்த நிலையில் அது உண்மையாகிவிடும் போலயே என நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in