பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் இந்த வாய்ப்புக்காக பலரும் காத்துக்கிடக்கின்றனர்,இந்த நிகழ்சியில் பங்கேற்றுவிட்டால் போதும் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை எளிதிக அடைந்து விடலாம் அதற்காகவே பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழில் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது அதுபோல கன்னடத்திலும் ஒளிபரப்பு ஆகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி உள்ளவர் தான் வர்துர் சந்தோஷ் என்பவர்.இவர் இந்த போட்டியின் பொழுது கழுத்தில் புலி நகத்தை டாலராக அணிந்திருந்ததைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து புகார் அளித்ததில் பேரில் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.இந்த செய்தி தற்போது கர்நாடகாவில் தீ போல பரவி வருகிறது மேலும் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in