The Indian Times

“உனக்கு இப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்தவன் பல பேரோட பாவத்த சம்பாரிச்சுருக்கான்!” BIGGBOSS Promo

பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்போது துவங்கப்பட்டு வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த முதல் வாரத்தில் எந்த ஒரு பெரிய சண்டையும் வீட்டில் இல்லை. தாமரை செல்விக்கும் , நமிதாவிற்கும் மன கசப்பு ஏற்பட்டது உண்மை. ஆனால் சிறிது நேரத்திலேயே அது சரியாகி விட்டது. பிறகு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எதற்காக வெளியேறினார் என்ற காரணம் பலர்குக்கும் தெரியவில்லை. இதை தொடர்ந்து இந்த வரம் முதல் நாளில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. அதில் கடைசி வரை விட்டு கொடுக்காமல் விளையாடி , முதல் வார தலைவர் பதவியை ஏற்றார் தாமரை செல்வி.

Advertisement

இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார நாமினேஷன் நடைபெற்றது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் இசைவாணியை குறிவைத்து உள்ளது போல் காணப்பட்டது. இதனையடுத்து அக்சரா அவர்களையும் அதிக அளவில் பரிந்துரை செய்யப்பட்டது. போல் காண்பித்த நிலையில் இந்த முதல் வாரத்தில் யார் வெளியேறுவார் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் கூடிக்கொண்டே செல்லும் வண்ணம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சி தொகுப்பில் போட்டியாளர்கள் இதுவரை சக போட்டியாளர்களுடன் பழகியதில் யாரை பிடிக்கும் பிடிக்காது என கேட்டு ஒன்றாக இருதவர்களுக்குள் மெதுவாக கொளுத்தி போட்ட பெருமை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் நெறியாளருமான கமல் ஹாசன் அவர்களையே சாரும். நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறிய நிலையில், நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in