ஜூலி மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்? டார்கெட் செய்யப்படுகிறாரா ஜூலி.? | Bigg Boss Ultimate | Julie

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமானவர் ஜூலி. இவர் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் எழுப்பிய கோஷங்கள் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பிரபலமானார். இவரை “வீரத்தமிழச்சி” என்று புகழ்ந்து மீம்ஸ்கள் பறந்தன. அந்த புகழைக் கொண்டு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாக்கும் ஏற்ப்பட்ட சண்டையினால் இவருக்கு குறும்படம் காட்டப்பட்டது. அது முதல் இன்று வரை இவரை நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

julie

விளம்பரம்

இவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் கலந்து கொண்டுள்ளார். நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு Task-ன் போது ஜூலியை மற்ற போட்டியாளர்கள் மோசமாக நடத்தினர். குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அபிராமி இருவரும் ஜூலியை கேள்விகளால் துளைத்தனர். முதல் சீசனில் கலந்து கொண்ட போது காலில் அடிப்ட்டதற்கு வயிற்று வலி என்று சொல்லி ஏன் அழுது கொண்டிருந்தாய் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜூலி என்னை அறியாமல் சில தவறுகளை நான் செய்துள்ளேன் என பதிலளித்தார். மேலும் அபிராமி ஜல்லிக்கட்டு போரட்டத்தில் உனக்கு நல்ல பெயர் இருந்தது, ஆனால் பிக்பாஸ்க்கு வந்த பிறகு உங்களை கீழே இறக்கி விட்டார்களே என்று கேட்ட கேள்விக்கு ஜூலி கண் கலங்கி பதில் அளித்தார். Youtube Video Embed Code Credits: Cineulagam

ஜூலி மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்? டார்கெட் செய்யப்படுகிறாரா ஜூலி.? | Bigg Boss Ultimate | Julie 1

விளம்பரம்

பிக்பாஸக்குப் பிறகு தனது தாய் தந்தையரை அசிங்கமாக பேசினர், எனது நண்பர்கள் கூட என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று கண்ணீர் மல்க கூறினார். கடந்த சீசனில் செய்த தவறை திருத்திக் கொள்ளவே இந்த சீசனுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் தாடி பாலாஜி குறுக்கிட்டு ஒரு சிறுவனின் கல்லீரல் சிகிச்சைக்காக ஜூலி ஒரே வாரத்தில் 23 லட்சம் திரட்டினார் என்று சொல்ல, அதற்கு என்னால் முடிந்த உதவியை நான் என்றைக்கும் செய்வேன் என பதிலளித்தார். மேலும் ஆதரவற்ற 13 பெண் குழந்தைகளை அவர் பலரின் உதவி கொண்டு படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஜூலியை திரைப் பின்புலம் இல்லாதவர் என்பதால் அவரை மற்ற போட்டியாளர்கள் மோசமாக நடத்துகிறார்களோ என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் எழுகிறது. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment