The Indian Times

பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜய்யின் ஆருயிர் நண்பரா? வனிதாவுக்கு வேற சொந்தக்காரராச்சே! Bigg Boss Wild Card Contestant

பொழுதுபோக்குக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்! வாய்ப்பிழந்த மற்றும் வாய்ப்பைத்தேடி அலையும் பிரபலங்களை தேர்வு செய்து ஒரே வீட்டுக்குள் அடைத்து வைத்து பிக் பாஸ் ஒவ்வொரு செயலாக செய்ய சொல்லி குடும்பமாக வாழ நினைப்பவர்களை குடுமியை பிடித்து சண்டைபோட வைக்கும் அளவிற்கு பல லீலைகளை செய்துவிட்டு ஒன்றுமறியாத பிள்ளையை போல இருப்பார் என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்த உண்மையே!


சில வாரங்களிலேயே இவர் வெற்றியாளராக வாகை சூடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பொதுமக்களே தொடங்கும் நிலையில், அதுமட்டுமில்லாமல் மாதம் முடிந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புது விருந்தாளியாக இளைய தளபதி விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது!

Advertisement


அது மட்டுமில்லாமல் மறைந்த பழம்பெரும் நடிகையான மஞ்சுளாவின் தங்கை மகன் என்பது பலரும் அறிந்திடாத தகவல் ஆகும்!சமீபத்தில் கூட மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்! வெள்ளித்திரையில் பெரிய பெயர் கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் திருமதி செல்வம், யாரடி நீ மோஹினி என இவர் நடித்து வெற்றிகொடிகட்டி பறந்த சீரியல்கள் ஏராளம்! இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்கும் சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! Watch The Video Below…!

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in