The Indian Times

உயிரை பனையவைத்து சாகசம் காட்டிய இரண்டு பெண்கள்! வைரல் வீடியோ .

அந்த காலத்தில் சைக்கிளை ஒரு கையில் ஓட்டுவதே பெரிய சாகசமாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு சர்க்கசில் பைக் சாகசம் செய்வோர்களை பார்த்திருப்போம். ஆனால் இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு பைக்கீல் சாகசம் செய்யும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றனர். காவல் துறை எதனை முறை எச்சரித்தாலும் , இன்றைய இளைஞர்கள் பைக் சாகசம் செய்வதை நிறுத்துவதில்லை. அப்படி தான் இங்கு இரண்டு பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேல் சென்று பைக் சாகசம் செய்துள்ளனர்.

Advertisement

 

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிவாங்கி தபஸ் மற்றும் ஸ்னேகா ராஜ்வன்ஷி ஆகிய இரு பெண்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து ரோட்டில் பைக் சாகசம் செய்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஒரு பெண் பைக் ஓட்ட மற்றொரு பெண் அவர் தோலின் மேல் உட்கார்ந்து கொண்டு வருகிறார். இதை பார்க்கும்போது நமக்கே பயம் வருகின்றது. இதை தொடர்ந்து அந்த இரண்டு பெண்களுக்கும் ரூ.28,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரை பனையவைத்து இப்படி ஒரு சாகசம் தேவையா?

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in