புது BMW காரில் ஜாலியாக ரைட் போன குக்கு வித் கோமாளி பிரபலங்கள்!

விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். குக்குகள் கஷ்டப்பட்டு சமையல் செய்வதும் அவர்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகளவில் பிரபலமடைந்தது புகழ் , ஷிவாங்கி , அஸ்வின் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு புகழய்க்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும்.

புது BMW காரில் ஜாலியாக ரைட் போன குக்கு வித் கோமாளி பிரபலங்கள்! 1

விளம்பரம்

அஸ்வினும் கூடிய விரைவில் சினிமாவில் கதாநாயகனாக ஆகி விடுவார் என்று பலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களையும் தண்டி இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சேரி கோமாளிகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அனைவரும் அறிந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக உள்ளார். நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்தாலும் கோமாளிகளுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்கும்படி செய்தது.

Cook with Comali Fun at set  | Vijay TV Stars | Thangadhurai Thamasha

விளம்பரம்

Video Embed Credits – Thangadurai Tamasha Youtube Channel  – இந்நிலையில் தற்போது செஃப் வெங்கடேஷ் பட் வாங்கிய BMW காரில் புகழ் , ரக்ஷன் , தங்கதுரை ஆகியோர் ரைடு சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் புகழ் புதிதாக வாங்கிய காருக்கு பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment