The Indian Times

நடிகர் போண்டாமணிக்கு உதவுவது போல நடித்து அவரிடம் இருந்து 1லட்சம் ரூபாயை ஆட்டையை போட்ட நபர்

இலங்கையை சேர்ந்த போண்டாமணி சினிமாவில் நடிக்க வேண்டும் என தீவிரமாக வாய்ப்பு தேடி வந்த நிலையில் அவருக்கு பாக்யராஜ் படத்தில் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.வடிவேலு உடன் கூட்டணி சேர்ந்து நடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

Advertisement

இவர் நடித்த படங்களிலில் குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு உண்டு.அதேபோல் சந்தானத்துடனும் இணைந்து நடித்துள்ளார்.தனது காமெடியினால் மக்களை சிரிக்க வைத்து சினிமாவில் தனி ஒரு இடத்தினை பிடித்தார் போண்டா மணி.இன்று வரை இவர் வடிவேலு,சந்தானத்துடன் இணைந்து செய்த காமெடி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.

Advertisement

தற்போது போண்டாமணி சிறுநீரக கோளாறு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,அவருக்கு தொடர்ந்து நடிகர்கள் தங்களால் இயன்ற பணம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.தற்போது இவருக்கு மருத்துவமனையில் ஆதாரவாகவும் உதவியும் செய்து வந்தவர் ராஜேஷ் ப்ரித்தீவ்.இவரிடம் நடிகர் போண்டாமனி மனைவி மாதவி மருந்து வாங்கிக்கொண்டு வர கூறி அவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.ராஜேஷ் ஏடிஎம் கார்டை கொண்டு சென்று நகை 1 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.அவர் மீது அளித்துள்ள புகாரின் படி அவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in