பேட் கம்மின்ஸை அடுத்து இந்தியாவுக்கு 41 லட்சம் நிதி உதவி செய்த பிரட் லீ !

இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டவமாக மக்களை கொன்று குவித்து வருகின்றது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் நடந்து வருகிறது. அரசாங்கம் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் டெல்லியில் உயிரிழப்புகளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதை தொடர்ந்து இப்படி நாடு முழுவதும் போராடி கொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் அவசியமா என்று பல தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

பேட் கம்மின்ஸை அடுத்து இந்தியாவுக்கு 41 லட்சம் நிதி உதவி செய்த பிரட் லீ ! 1

விளம்பரம்

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பேட் கம்மின்ஸ் 50,000 டாலர் அதாவது 37 லட்ச ரூபாய் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக இந்தியாவிற்கு நிதி உதவி செய்தார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது. இதை தொடர்ந்து தற்போது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ 41 லட்ச ருபாய் நிதி உதவி செய்துள்ளார்.

பேட் கம்மின்ஸை அடுத்து இந்தியாவுக்கு 41 லட்சம் நிதி உதவி செய்த பிரட் லீ ! 2

விளம்பரம்

மேலும் இந்தியாவை என் 2வது தாய் நாடாக உணர்கிறேன், அது மட்டுமில்லாது ஓய்வுக்கு முன்பும் சரி , அதற்கு பின்பும் சரி இந்தியர்கள் என்மீது அன்பு காட்டினார்கள் என்று கூறியுள்ளார் பிரெட் லீ. இது வரை எந்த இந்திய வீரர்களும் இந்தியாவிற்கு நிதி உதவி செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் வெளி நாட்டு பிலேயேர்கள் , நன்றி மறக்காமல் நிதி உதவி செய்யும் அந்த குணத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது.

https://twitter.com/BrettLee_58/status/1387017917376516102

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment