The Indian Times

பிரிகிடா பேச்சினால் கிளம்பிய சர்ச்சை..பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குனர் பார்த்திபன்

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் பார்த்திபன் எழுதி,இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பிரிகிடாவுக்கு நல்ல வரவேற்பினையும் பெற்று தந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்க்க பிரிகிடா சென்ற பொழுது அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் ,அப்பொழுது அவர் சேரிக்கு போனால் அந்த மாதிரியான வார்த்தைகளை தான் கேட்க முடியும் ,சினிமாவுக்காக நாம் ஏமாற்ற முடியாது,மக்களுக்கு தெரியும் அங்கு எப்படி பேசுவார்கள் என தெரிவித்திருந்தார்.இதனால் பெரும் சர்ச்சை இணையத்தில் கிளம்பியது.இதனால் பிரிகிடா தான் பேசியதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்,மேலும் இடத்தினை பார்த்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன் என பதிவிட்டு வருத்தமும் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் இதற்கு இயக்குனர் பார்த்திபனும் மன்னிப்பு கோரியுள்ளார்,அதன்படி அவர் கூறியதாவது,Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! என தெரிவித்துள்ளார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in