உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிரது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் மேல் மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 17 கோடிக்கு மேல் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்னதான் அரசாங்கம் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தினாலும், ஊரடங்கு அறிவித்தாலும் மக்கள் அதை சரியாக கடைபிடிப்பதில்லை. இந்தியளவில் மட்டுமல்ல உலகளவில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்தியாவில் தான் இந்த இரண்டாவது அலை அதிபயங்கரமான பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி மக்கள் போட்டுக்கொள்ள அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மை.
இன்னும் மக்களுக்கு தடுப்பூசி ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் தீரவில்லை. இந்நிலையில் பிரிட்டன் அரசாங்கம் 12 முதல் 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களும் இனி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக இதுவரை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பிரிட்டன் அரசாங்கம் சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இதனால் எந்த விதமான விளைவுகளும் ஏற்படாது என்று ஆய்வு செய்த பின்னரே நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in