செஃப் வெங்கடேஷை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்…..TROLL-களுக்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.கோடான கோடி பேர் இந்த நிகழ்ச்சியை வாரம் தோறும் தவறாமல் கண்டு வருகின்றனர்.இதில் கலந்து கொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள் இவர்களுடன் நடுவர்கள் என அனைவரும் செய்யும் நகைச்சுவை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.கவலையில் இருக்கும் பலருக்கும் மருந்தாக இந்த நிகழ்ச்சி அமைவது என்பது உண்மையே.

கட்டாயம் படிக்கவும்  மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜீவா... பாண்டியன் ஸ்டோர்

செஃப் வெங்கடேஷை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.....TROLL-களுக்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் 1

விளம்பரம்

இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.முன்னதாக இதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நிகழ்ச்சிகளில் செஃப் வெங்கடேஷ் பட் ஒரு கடுமையான நடுவராகவே நடந்துள்ளார்.ஆனால் இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் மாறி கோமாளிகளுடன் இணைந்து லூட்டி அடித்துக்கொண்டு வருகிறார்.தற்போது கடந்த வார நிகழ்ச்சியில் இவர் கூறிய விஷயம் இணையத்தில் பெரும் கேலியாக மாறி இவரை நெட்டிசன்கள் வளைத்து கலாய்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

செஃப் வெங்கடேஷை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.....TROLL-களுக்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் 2

விளம்பரம்

கடந்த வாரம் நிகழ்ச்சியில் பேசிய அவர்,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.தற்போது இதனால் இவரை நெட்டிசன்களை வளைத்து பிடித்து கிண்டலடித்து வருகின்றனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த வெங்கடேஷ் கூறியதாவது,கடந்த இரண்டு நாட்களாக நொறுங்கிவிட்டேன்.என்னை கேலி செய்கிறார்கள் என்பதற்காக அல்ல ஆனால் மனிதம் செத்துவிட்டதோ என எண்ணி வருந்தினேன்.குழந்தை இருப்பவர்களுக்கு தான் தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்யமென்று,இல்லாதவர்கள் நிலையை யோசித்து பாருங்கள் ,மீம் கிரியேட்டர்கள் என்னை கேலி செய்வதாக நினைந்து உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள் என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “செஃப் வெங்கடேஷை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்…..TROLL-களுக்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட்”

  1. Dear Venkatesh Bhat..
    If anyone walks on the street, whether he is a celebrity or a normal person…the barking dog can not distinguish…so leave it to the dogs… let them bark till they are tired and their throats become dry.

    Reply

Leave a Comment