The Indian Times

வெற்றிக்கோப்பையை கைகளில் ஏந்திய சென்னை அணியின் மகிழ்ச்சியான தருண புகைப்படங்கள் இதோ

கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,அதுவும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் சற்று அதிகம் என்று தான் கூறவேண்டும்.அந்தளவுக்கு ஐபிஎல் மக்கள் மனதுடன் ஒன்றியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது,தற்போது 16வது ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது,ஒவ்வொருநாளும் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி கொண்டே சென்றது.

Advertisement

இந்த போட்டியில் சுமார் 10 அணிகள் நேருக்கு நேர் மோதி விளையாடின.

தற்போது ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் மோத இருந்த நிலையில் மழை காரணத்தினால் தடைபட்டது.தற்போது இந்த போட்டி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement

இதில் குஜராத்தை எதிர்த்து சென்னை அணி விளையாண்டது,15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,தற்போது 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வெற்றிபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL