The Indian Times

சென்ட்ரலில் குக்கூ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பெண் போலீஸ்!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிபயங்கரமாக பரவி வருகிறது. போன வருடம் பாதித்ததை விட இந்த வருடம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் வட இந்தியா பக்கம் அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்கள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு தற்போது அரசாங்கமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Advertisement

மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அத்தியாவசத்திற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் , அனாவசியமாக வெளியே வர கூடாது என்று பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். தற்போது வரை மினி லாக் டௌன் மட்டுமே அறிவித்து வரும் அரசாங்கம் கூடிய விரைவில் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Advertisement

இப்படி அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும், பல மக்கள் அதை பின்பற்றுவதில்லை. இதனால் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தமிழக பெண் போலீஸ் நடனமாடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி இருக்கிறார்கள். சென்னை ரயில்வே ஸ்டேஷனில் குத்தாட்டம் போட்டு மக்களுக்கு கொரோன விழிப்புணர்வுக்காக நடனமாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in