சீனாவில் மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல்! பீதியில் மக்கள்

உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் நோய் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் இருந்து தான் உலகம் முழுவதும் பரவப்பட்டது என்று பலர் கூறினாலும் அதற்கான சரியான ஆதாரங்களை திரட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று இந்த கொரோனா வைரஸின் இரண்டாவது வேகமாக பரவி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் மேலும் ஒரு நோய் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல்! பீதியில் மக்கள் 1

விளம்பரம்

சில வகையான பறவை காய்ச்சல் மனிதர்களிடம் பரவியது கிடையாது. ஆனால் இந்த முறை சீனாவில் 41 வயதான நபருக்கு H10N3 எனப்படும் பறவை காய்ச்சல் பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயது நபருக்கு இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் சீனாவிற்கு மற்றொரு நோய் பரவுவது தெரிய வந்ததுல சீனா மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல்! பீதியில் மக்கள் 2

விளம்பரம்

இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த காய்ச்சலால் மனிதனின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெட்ரா பிறகு நலமாக வீடு திரும்பிவிட்டார் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாது இந்த பறவை காய்ச்சல் வேகமாக பரவாது என்றும் கூறியுள்ளனர்.

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல்! பீதியில் மக்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் அந்த நபரோடு கூட இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு , அவர்களுக்கு எந்த விதமான பறவை காய்ச்சல் பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இந்த வகையான பறவை காய்ச்சல் முதல் முறையாக ஒருவரை பாதித்துள்ளது சீனா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல்! பீதியில் மக்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment