The Indian Times

CHIYAN61 படபூஜை..விபூதியை தவிர்த்த விக்ரம்….கேட்டு வாங்கி விபூதி வைத்துக்கொண்ட சாண்டி MASTER

நடிப்பின் அரக்கன் என்றால் நடிகர் விக்ரமை சொல்லலாம்.காரணம் அந்தளவிற்கு நடிப்பின் மேல் வெறிகொண்டவர்,நடிப்பிற்காக எந்த அளவிற்கும் செல்ல கூடியவர் இவர்.உதாரணமாக சொல்ல போனால் ஐ படத்தில் விக்ரம் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் அந்த அளவிற்கு உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.இதை விட இவர் நடிப்பின் அரக்கன் என்று சொல்வதற்கு வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.ரசிகர்கள் சீயான் என செல்லமாக அழைத்து இவரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.இவர் எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்த படத்தின் கதாபாத்திரமாக அப்படியே மாறிவிடுவார்.எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே இன்று இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Advertisement

இந்நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.இந்த பூஜையில் ,அர்ச்சக வரிசையாக திருநீர் அனைவருக்கும் பூசிவிடவே ,விக்ரமிடம் வரும் வேளையில் அவர் வேண்டாம் என தவிர்த்துள்ளார்,அதே சமயம் நடன இயக்குனர் சாண்டி கேட்டு வாங்கி திருநீர் வைத்துக்கொண்டார்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.விக்ரம் கிறிஸ்துவ மதத்தினை பின்பற்றுபவர் என்பது அனைவருக்கும் தெரியும் சாண்டியும் கிரிஸ்துவர் தான் ஆனால் எம்மதமும் சம்மதமும் என நினைப்பதால் சாண்டி திருநீர் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார்.

Embed video credits : Studio Green

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in