இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
யூடியூபில் TTF வாசன் என்பவர் பைக் ட்ராவல் சேனல் வைத்துள்ளார்.பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவரின் யூடியூப் பக்கத்தினை சுமார் 26 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னையில் தனது ரசிகர்களை முதல் முறையாக வாசன் சந்திக்க வந்த பொழுது மிகப்பெரிய கூட்டமே கூடி போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர்.இந்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு வாசன் தந்து 23வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்களை சந்தித்தார்.அங்கு கூட்டம் தாறுமாறாக திரண்டது.சினிமா பிரபலங்களுக்கு திரளும் வண்ணம் திரண்டது.
இவர் தனது வீடியோக்களில் பிறர்க்கு ஹெல்மெட் அணிய,வாகனத்தில் இரண்டு பேர் செல்ல அறிவுரை கூறினாலும் இவர் சாலை விதிகளை சில நேரம் மதிக்க தவருகிறார்.தேசிய நெடுஞ்சாலைகளில் சில சமயம் தனது சூப்பர் பைக்கில் 240கிமீ வரை செல்கிறார்,அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.இதனால் இவரை போல இளைஞர்களும் ஆபத்தான செயலில் ஈடுபடுவார்கள் என இவருக்கு இணையத்தில் எதிர்ப்பு அதிகமாகிறது.மேலும் இவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.மேலும் புதுச்சேரி மாநில திமுக மகளிரணியை சேர்ந்த காயத்ரி தனது ட்வீட்டர் பக்கத்தில் வாசன் விதிமீறல் வீடியோ பதிவிட்டு புகார் தெரிவித்துள்ளார்
ஆனது ஆகட்டும் பார்த்துகிறலாம்! @tnpoliceoffl
TTF Vaasan is highly injurious to the Young Society! TN bike Vlog Youtube channels should be invigilated. 1/3 pic.twitter.com/t1TSxMkqjC— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) July 3, 2022
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in