அடடே!!இவருக்கா இப்படி ஒரு நிலைமை..அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஆக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி 2003 ஆம் ஆண்டு வெளியாகிய கங்கோத்ரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கில் கொடுத்து இன்று அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.இவர் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர்,அந்த அளவிற்கு இவர் மீது அன்பினை வைத்துள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  மீனாவின் கணவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்

அடடே!!இவருக்கா இப்படி ஒரு நிலைமை..அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு 1

விளம்பரம்

அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பல மொழிகளிலும் வெளியாகிய புஷ்பா படம் சக்க போடு போட்டு வசூலை அள்ளிக்குவித்தது.இப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.தற்போது பல தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அல்லு.இதனை தொடர்ந்து கூடிய விரைவில் புஷ்பா தி ரூல் என்ற இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.அந்த அளவிற்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது இப்படம்,இந்நிலையில் கடந்த சில நாட்களாக அல்லு அர்ஜுன் நடிக்கும் விளம்பர படங்கள் சர்ச்சையை சந்தித்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மலையில் இருந்து சரிந்து வந்த நடிகர் செந்தில் காரை தாங்கி பிடித்து காப்பாற்றிய VIJAY TV தங்கதுரை..

அடடே!!இவருக்கா இப்படி ஒரு நிலைமை..அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு 2

விளம்பரம்

அதன்படி தற்போது கோத்தா உபேந்தர் ரெட்டி என்பவர் அல்லு அர்ஜுன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்,அந்த புகாரில் கூறியதாவது,அல்லு அர்ஜுன் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு விளம்பரம் செய்தார் அந்த விளம்பரத்தில் தவறான தரவரிசை புள்ளி விபரத்தினை பகிர்ந்து மக்களை ஏமாற்றியுள்ளார்.,இதனால் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.மேலும் இதுபோல தவறான தகவல்களை கொண்டு விளம்பர படங்கள் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்ட இந்த வழக்கினால் இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment