எங்க அம்மா உயிரோட இருக்க காரணமே இந்த ஷோதான்..Fan வெளியிட்ட எமோஷனல் வீடியோ | Cook With Comali

விளம்பரம்
விளம்பரம்

குத் வித் கோமாளி நிகழ்ச்சி பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது எனலாம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான அளவில் ரசிகர்கள் உண்டு என்று சொன்னால் அது மிகையில்லை. சமையல் என்றால் என்னவென்றே தெரியாமல் சுட்டித் தனங்கள் மட்டுமே நிறைந்த கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்து அசத்தும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. சமையலுக்கு இடையில் நடுவர்கள் கொடுக்கும் இடையூறுகளை சமாளித்துக் கொண்டு குக்குகளும் கோமாளிகளும் அடிக்கும் லூட்டிகள் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடும்.

எங்க அம்மா உயிரோட இருக்க காரணமே இந்த ஷோதான்..Fan வெளியிட்ட எமோஷனல் வீடியோ | Cook With Comali 1

விளம்பரம்

இதில் கோமாளிகளாக வந்தவர்களும், குக்குகளாக வந்தவர்களும் வேற லெவலில் கலக்கி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு, பிண்ணனியில் பாடும் வாய்ப்பு என வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த சீசனில் வந்த அஸ்வின் இன்று பல படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பரட்டை புகழ் வலிமை படத்தில் தல அஜித்துடன் நடித்துவிட்டார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். சிவாங்கி பல படங்களில் பிண்ணனி பாடிவிட்டார். இவ்வாறு அவர்கள் வாழ்க்கையே மாறத் தொடங்கிவிட்டது. Youtube Video Code Embed Credits: Galatta

எங்க அம்மா உயிரோட இருக்க காரணமே இந்த ஷோதான்..Fan வெளியிட்ட எமோஷனல் வீடியோ | Cook With Comali 2

விளம்பரம்

ஆனால் பார்க்கும் மக்களுக்கு இதனால் என்ன லாபம் என்றால் மக்கள் தங்களை மறந்து சிரிக்கின்றனர். தங்கள் கஷ்டங்கள் எல்லாம் மறந்து, சிறந்த Stress Busterஆக இந்த நிகழ்ச்சி உள்ளது என்கின்றனர். அப்படிதான் குக் வித் கோமாளி ரசிகர் ஒருவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மரண படுக்கையில் இருந்த தன் தாயாருக்கு குக் வித் கோமாளியை மொபைலில் போட்டு காட்டியதால் கவலைகள் மறந்து என் அம்மா சிரித்து அவர் உடல் நிலை தேறியது என்றும், குக் வித் கோமாளியால் தன் தாயை மீட்டு கொண்டுள்ளதாகவும், இதில் வரும் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றியும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment